இலங்கைக்கே உரித்தான எலி இனத்தை பேராதனைப் பலகலைக்கழக விலங்கியல் விஞ்ஞான பிரிவு ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பேராதனைப் பல்கலைக்கழக விலங்கியல் பீட பிரதானி பேராசிரியை சுயாமா போகஹகொடவும் அவரது குழுவினருமே மத்திய மலை நாட்டிலுள்ள தும்பறை மலைப்பகுதியில் இத்தகைய எலி இனங்கள் வாழ்வதாகக் கண்டு பிடித்துள்ளனர்.
இது தொடர்பாக பேராசிரியை சுயாமா போகஹகொட தெரிவிக்கையில்,
1930 களில் டப்னியூ.டப்ளியூ. ஏ. பிலிப்ஸ் என்பவரது ஆய்வுகளுக்குப் பின்னர் பாரியளவிலான எலிகள் பற்றிய ஆய்வுகள் ஏதும் நடைபெறவில்லை.
இருப்பினும் 2001ல் மேற்கொள்ளப்பட்ட எலிகள் தொடர்பான ஆய்வுகளை நாம் மேலும் தொடர்ந்ததன் காரணமாக இப்புதிய இனத்தைக் தும்பறைப் பிரதேசத்தில் கண்டுபிடிக்க முடிந்தது .
அதே நேரம் தும்பறை மலைச்சாரல்களில் தாவர- விலங்கு சமநிலைத்தன்மை பொதுவாகக் ககாணப்படுகிறது.
இதனை நாம் தொடர்ந்து பாதுகாப்பதன் மூலமே எமக்கு உரித்ததான விலங்கு மற்றும் தாவர இனங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் . சில மனித நடவடிக்கைகள் காரணமான மேற்படி சமநிலைத் தன்மை மாற்றமடைய வய்ப்பு உள்ளது.
நக்கில்ஸ் மலைத்தொடருக்கு அண்மித்த பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த எலி இனத்திற்கு “மொஸ் தும்பறை ” அல்லது தும்பறை சிறிய முள் எலி (தும்பற ஹீன் கட்டு மீயா) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை 14 வகையான எலி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இதனுடன் சேர்த்து இப்போது மொத்தம் 15 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன என்றார்.
