முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதியரசர் ரவீந்திர பிரேமரத்ன, பிரதிவாதிகள் ஒவ்வொருவரையும் தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்த நீதிமன்றம், அவர்களின் கைரேகை அடையாளங்களைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் பூர்வாங்க விசாரணை (Pre-trial conference) எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகையில், சேபாலிகா சமன் குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொட்டகம ஆகியோர் ஏனைய பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
