Quick Tamil News
  • முகப்பு
  • செய்தி
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • ஜோதிடம்
    • Birthday Diary
    • RIP Book
    • Gallery
    • தொழில்நுட்பம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்தி
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • ஜோதிடம்
    • Birthday Diary
    • RIP Book
    • Gallery
    • தொழில்நுட்பம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரு நாட்களில் 24 பேர் பலி!

accident|vesk|quicktamilnews|srilanka

ஆனி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கடந்த மே 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் மாத்திரம் நாடு முழுவதும் இடம்பெற்ற 19 வீதி விபத்துக்களில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகப் போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டப்ளியூ.பீ.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்தத் திடுக்கிடும் புள்ளிவிபரங்களை வெளியிட்டார்.

குறித்த இரு தினங்களில் பதிவான ஒட்டுமொத்த விபத்துக்களில்
கடந்த 2 நாட்களில், 19 வீதி விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இக்காலப்பகுதியில் 29 கடுமையான விபத்துக்களும், 96 சிறிய விபத்துக்களும், 19 சேத விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.

இந்த வீதி விபத்துக்களுடன் தொடர்புடைய வாகனங்களில் உந்துருளிகளே அதிகளவில் விபத்துக்குள்ளாகியுள்ளன.

மோட்டார் சைக்கிள்கள் 15, முச்சக்கரவண்டிகள் 03, பாரவூர்திகள் 02, தனியார் பேருந்துகள் 02, கெப் ரக வாகனங்கள் 01 என்பன விபத்துக்குள்ளாகியுள்ளன.

உயிரிழந்த 24 பேரில் அதிகளவானோர் வீதியில் நடந்து சென்ற பாதசாரிகள் என்பது விசேட அம்சமாகும்.

இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர்களில் பாதசாரிகள் (நடந்து சென்றவர்கள்) 13 பேர், உந்துருளி ஓட்டுநர்கள் 07 பேர், உந்துருளியின் பின் ஆசனத்தில் பயணித்த பயணிகள் 01, மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டுநர் 01 நபர், வாகன ஓட்டுநர்கள் 01, வாகனப் பயணிகள் 01 ஆவர்.

பண்டிகைக் காலங்களில் வாகனங்களைச் செலுத்தும் போதும், வீதிகளில் பயணிக்கும் போதும் பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்கள் அதிக அவதானத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் எனப் பிரதி காவல்துறை மா அதிபர் இங்கு மேலும் வலியுறுத்தினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாளை பலத்த மழை பெய்யக்கூடும்! வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பழுதடைந்த உணவினை வழங்கிய உணவக நிர்வாக நடத்துனருக்கு விளக்கமறியல்!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

30 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர் அஸாருடீனுக்கு விளக்கமறியல்!

வைகாசி 9, 2026
இலங்கைவானிலை

தொடரும் 21 மாவட்டங்களுக்கான வெப்ப எச்சரிக்கை!

சித்திரை 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube