Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரனை தனியார் வகுப்பு உரிமையாளர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

ஆடி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹொரனையில் உள்ள பிரபல தனியார் வகுப்பு உரிமையாளர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரனை, நார்தனகலை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து சுமார் 15 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கைபேசி, சிம் கார்ட் மற்றும் போதைப்பொருளை அளவிடப் பயன்படுத்தப்பட்ட மின்னணு தராசு என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் ஹொரனை பகுதியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நார்தனகலையில் உள்ள சந்தேகநபரின் வீட்டிற்கு பொலிஸார் சென்ற போது, அவர் தப்பிச் செல்ல முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் மீது இதற்கு முன்னரும் போதைப்பொருள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்தாரா, போதைப்பொருள் விநியோக வலையமைப்பை நடத்தினாரா அல்லது தனது வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு போதைப்பொருள் வழங்கி வந்தாரா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

7 பொலிஸ் அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்ல தடை!

சித்திரை 24, 2026
இலங்கைஎங்கள் ஊர்

6 வயது சிறுமி உலக சாதனை!

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலேவின் மனு ஒத்திவைப்பு

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கசிப்புடன் கைது செய்யப்பட்ட ஆண் ஒருவர்- பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழப்பு!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube