Quick Tamil News
  • முகப்பு
  • செய்தி
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • ஜோதிடம்
    • Birthday Diary
    • RIP Book
    • Gallery
    • தொழில்நுட்பம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்தி
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • ஜோதிடம்
    • Birthday Diary
    • RIP Book
    • Gallery
    • தொழில்நுட்பம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை இளம் தடகள அணி நாடு திரும்பியது!

Sri Lanka,quicktamilnews

ஆனி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹொங்கொங்கில் நடைபெற்ற 2026 ஆசிய 20 வயதுக்குட்பட்டோருக்கான (U20) தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 02 தங்கம், 02 வெள்ளி மற்றும் 04 வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 08 பதக்கங்களை வென்று, பல பலம் வாய்ந்த ஆசிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி பதக்கப் பட்டியலில் 08வது இடத்தைப் பிடித்து பெருமை சேர்த்த இலங்கை இளம் தடகள வீரர்கள் இன்று  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

வெற்றிபெற்ற வீரர்களை வரவேற்பதற்காக, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்  சுனில் குமார கமகேவின் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவினர் விமான நிலையத்திற்குச் சென்றிருந்தனர்.

இதன்போது அமைச்சரைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் தர்ஷன வராகொட, அபிவிருத்திப் பணிப்பாளர், எம்.ஏ.பி. திலும் தயாரத்ன மற்றும் உதவி விளையாட்டுப் பணிப்பாளர் டபிள்யூ.ஜி.எம். துஷார உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை தடகள சங்கத்தின் தலைவர் பிமல் விஜேசிங்க அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், வெற்றிபெற்ற வீரர்களின் பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்கள் உட்பட பெருமளவிலான பொதுமக்கள் விமான நிலைய வளாகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இலங்கைக்காக பதக்கங்களை வென்றவர்கள்:

தங்கப் பதக்கங்கள்: தருஷி அபிஷேகா (பெண்களுக்கான 1500 மீ – 04:31.41 நிமிடங்கள்), ரன்சினி பெரேரா (பெண்களுக்கான 200 மீ – 24.07 வினாடிகள்)

வெள்ளிப் பதக்கங்கள்: தருஷ மெண்டிஸ் (ஆண்களுக்கான உயர பாய்தல் – 2.14 மீ), நெத்சர தினேத் (ஆண்களுக்கான 800 மீ – 01:49.22 நிமிடங்கள்)

வெண்கலப் பதக்கங்கள்: சதெவ் ராஜகருணா (ஆண்களுக்கான 200 மீ – 21.13 வினாடிகள்), மிஹின்சா அபேரத்ன (பெண்களுக்கான உயர பாய்தல் – 1.72 மீ), தருஷி அபிஷேகா (பெண்களுக்கான 800 மீ – 02:07.97 நிமிடங்கள்) மற்றும் 4×400 மீ கலப்பு தொடரோட்டக் குழு.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

QR முறை மூலம் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு உர மானியம்!

சித்திரை 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்த பெருமானால் அருளப்பட்ட தர்ம ஒழுக்கநெறிக்கு அமையவே துறவிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் – கஸ்ஸப தேரர்!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் இதயம் போன்ற மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவது அவசியம்

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டனில் வயோதிப தம்பதியினர் கொலை

வைகாசி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube