கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 192 ஆவது வருடாந்த திருவிழா இன்று புதன்கிழமை (3) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
கொடியேற்றத்திற்கு முன்னதாக இன்றையதினம் தமிழ், சிங்கள மொழிகளில் காலை 6 மணிக்கு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.
கொடியேற்றத்தை தொடர்ந்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தினந்தோறும் நவநாள் வழிபாடுகள் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.
எதிர்வரும் 12 ஆம் திகதி இரவு 7 மணிக்கு கொழும்பு உயர்மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நற்கருணை ஆராதனை இடம்பெறவுள்ளது.
திருவிழா தினமான 13 ஆம் திகதியன்று அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும் 5 மணிக்கு சிங்கள மொழியிலும் 6 மணிக்கு தமிழ் மொழியிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.
மேலும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தில் 13 ஆம் திகதி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணியளவில் புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்து நற்கருணை ஆசீர்வாதம் மற்றும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் நிறைவுபெறும்.
