Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலேவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை விண்ணப்ப கோரல்!

ஆனி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை, விசேட மருத்துவக் குழுவொன்றின் முன்னிலையில் பிரசன்னப்படுத்தி, அறிக்கை ஒன்றை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு உத்தரவிடுமாறு சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கை மீதான கட்டளை எதிர்வரும் 10ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன இன்று (04) அறிவித்தார்.

சுரேஷ் சலே சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்று இன்று (4) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இதனைத் தெரிவித்தார்.

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் சுகாதார நிலைமை குறித்துப் பரிசோதிப்பதற்காக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஊடாக விசேட சட்ட மருத்துவக் குழுவொன்றை நியமிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக விடயங்களை முன்வைத்த மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

அதேவேளை, சந்தேகநபர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, தனது சேவை பெறுநர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதன் பின்னர் பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகிய நோய்நிலைமைகளினால் பாதிக்கப்பட்டுள்ளதால், உயிரை மாய்த்துக் கொள்ளும் போக்குக் காணப்படுவதாகவும், அதற்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதற்குப் பொருத்தமான சூழலை ஏற்படுத்தித் தருமாறும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கை

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் நிறைவு – 4000 மக்களிடம் கையளிப்பு !

சித்திரை 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

வைகாசி 19, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கென்யா விடுதிப் பாடசாலையில் பயங்கர தீவிபத்து – 16 மாணவிகள் பலி!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை

வைகாசி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube