352 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹசீஸ் (Hashish) போதைப்பொருள் தொகுதியுடன் கனடா நாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
எமிரேட்ஸ் (Emirates) விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இப்பெண் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், கட்டுநாயக்க சுங்க போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போதே இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹசீஸ் போதைப்பொருளின் மொத்த எடை 35 கிலோகிராம் 265 கிராம் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
