கைது செய்யப்பட்டவர்கள் 29 மற்றும் 42 வயதுடைய சீன நாட்டு வர்த்தகர்கள் இருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று அதிகாலை 01:20 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான SQ-469 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
விமான நிலையத்தின் வருகை முனையத்தில், சுங்கப் பிரகடனங்கள் எதுவும் இல்லை எனக் குறிப்பிடும் “பச்சை வழித்தடத்தை” (Green Channel) பயன்படுத்தி இந்த சிகரெட் தொகையை கடத்திச் செல்ல முயன்ற போதே இவர்கள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த 04 பயணப் பொதிகளுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட 30,400 சிகரெட்டுகளைக் கொண்ட 152 சிகரெட் கார்ட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேகநபர்களைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
