Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலிஸாரின் சேவைகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்!

ஆனி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கை பொலிஸாரினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள், முறைப்பாடுகள், பாராட்டுக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கான, புதிய QR குறியீட்டு முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் சேவைகள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை நேரடியாக வழங்குவதற்காக, Sri Lanka Police Community Feedback Portal என்ற இணையவழி டிஜிட்டல் தளம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தெரிவிக்கும் முறைப்பாடுகள் கருத்துக்களைப் பகுப்பாய்வு செய்து மக்களை மையமாகக் கொண்ட திறமையான சேவையை வழங்குவதே இதன் நோக்கம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

QR குறியீட்டைப் பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பிரிவைத் தேர்ந்தெடுத்து தகவல்களைப் பதிவுசெய்ய முடியும்.

அத்துடன், விருப்பமுள்ளவர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களையும் வழங்க முடியும்.

காவல் நிலையத்திற்கு சென்றமைக்கான காரணம் அல்லது சம்பவம் தொடர்பான விபரங்களையும் பதிவு செய்யும் வசதி இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் E-Services என்ற பகுதி மூலமாகவும் இந்த Community Feedback Portal தளத்தை அணுக முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்புப் பிரிவுகள் மற்றும் முறைப்பாட்டுப் பிரிவுகளுக்கு அருகில் QR குறியீட்டுப் பலகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

அமெரிக்க-ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு

ஆனி 15, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வரதட்சிணை கொடுமை! 3-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

வைகாசி 18, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பை மையமாகக் கொண்ட பொசன் வலயம்

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube