உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியான நிலையில், தற்போது மனஅழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணம் இருப்பதாகக் கூறி சுரேஷ் சலே பிணை கோருவது விசித்திரமான நாடகமென மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள் மூலம் உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளதாகவும், அவற்றை எந்தத் தரப்பும் தடுக்கக் கூடாதெனவும் வலியுறுத்தினார். மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதனைச் சூழ்ந்த அரசியல் தொடர்புகள் குறித்து முழுமையான உண்மைகள் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
