கம்பளை, கீரப்பனை பகுதியில் இடம்பெற்ற கூரிய ஆயுதத் தாக்குதலில் 52 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அவர் கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரம்ப விசாரணைகளில், உயிரிழந்த நபருக்கும் அவரது மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்ததையடுத்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
