கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (University of Cambridge) ஆராய்ச்சியாளர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் முற்றிலும் புதிய வகை தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இதில் வைரஸ்களை அடையாளம் காணும் முக்கிய பகுதி (ஆன்டிஜென்) முழுமையாக AI மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி, வைரஸ்கள் தொடர்ந்து மாற்றமடையும்போதும் பரந்த பாதுகாப்பை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முதற்கட்டமாக 39 ஆரோக்கியமானவர்களில் மேற்கொள்ளப்பட்ட மனித பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
அடுத்த கட்டமாக சுமார் 200 பேரில் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசியின் செயல்திறன் மேலும் விரிவாக மதிப்பிடப்படும்.
இந்த முன்னேற்றம் காரணமாக, வருடாந்திர மாற்றம் தேவையில்லாத காய்ச்சல் தடுப்பூசி, பறவைக் காய்ச்சல் மற்றும் எபோலா போன்ற நோய்களுக்கு கூட ஒரே தீர்வு கிடைக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தடுப்பூசி குழும பணிப்பாளர் ஆண்டி பொல்லார்ட் (Andy Pollard) இது குறித்து கூறுகையில், “செயற்கை நுண்ணறிவு தடுப்பூசி ஆராய்ச்சியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் (University of Oxford) ஆராய்ச்சியாளர்களும் இதை எதிர்கால மருத்துவத்தில் முக்கிய முன்னேற்றமாகக் கருதுகின்றனர்.
