Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

300 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

Assets|frozen|quicktamilnews

ஆனி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த பெண் ஒருவரின் சொத்துக்களை முடக்குவதற்கு (செயலிழக்கச் செய்வதற்கு) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பு 14 பிரதேசத்தில் வசிக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர், தனது கணவருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய சில சொத்துக்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட பெண்ணின் இரண்டாவது கணவரால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட, தொட்டலங்க பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் 300 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1.30 பேர்ச் காணி மற்றும் 0.75 பேர்ச் காணியுடன் கூடிய மூன்று மாடி வீடு ஆகியன பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சொத்துக்கள் தொடர்பான முடக்கக் கட்டளையை கொழும்பு மேல் நீதிமன்றம் நீடித்து அமுல்படுத்தியுள்ளதுடன், இன்று முதல் 07 நாட்களுக்கு இந்த முடக்கக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 12-ஆவது முறையாக முதலிடம் பிடித்த ஜோ ரூட்!

ஆனி 24, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிப்பு!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாமிமலை பெயார்லோன் தமிழ் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா!

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தங்காலையில் 4 பிள்ளைகளின் தந்தையொருவர் மர்மமான முறையில் மரணம்!

ஆடி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube