Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் விரைவில்

ஆடி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும். இந்த சட்டம் இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (21) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக வளமான நாடு- அழகான வாழ்க்கை கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதியளித்துள்ளோம். அந்த வாக்குறுதிக்கு அமைவாக பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரத்துடன் விசேட நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழு சமர்ப்பிக்கும் பரிந்துரைகளுக்கு அமைவாக விரைவில் சட்டமூலம் வெளியிடப்படும்.

இதற்கமைய பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்த சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம் என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

1980களின் பிற்பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர் – ITJP புதிய தரவுத்தளம் வெளியீடு!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நோர்வுட் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு புதிய வகுப்பறைக் கட்டிடம் கையளிப்பு!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நுளம்புகளை அழிக்க பயன்படுத்தும் புகையினால் சுற்றுச்சூழல் பாதிப்பு!

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நல்லூரான் தேர் நாளை!

புரட்டாதி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube