கிளிநொச்சி – பூனகரி பகுதியில் வனவளத் திணைக்களத்தில் கடமையாற்றி வந்த அதிகாரியொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூனகரி பகுதியில் பணியாற்றி வந்த வனவளத் திணைக்கள அதிகாரியொருவர் உயிரிழந்த நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
