காங்கேசன்துறை முதல் கல்பிட்டி வரையிலான கடல் பகுதிகளில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக, மறுஅறிவிப்பு வெளியாகும் வரை கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த கடற்பரப்பில் பயணிக்கும் மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும், அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
