2027 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1448) சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஹஜ் புனித யாத்திரையை ஒழுங்குபடுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் பயண முகவர்கள் பட்டியலை முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
ஹஜ் மற்றும் உம்ரா குழுவின் வழிகாட்டலின் கீழ் இந்தத் தெரிவு மேற்கொள்ளப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்களின் பெயர்கள் அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன.
தெரிவு செய்யப்பட்ட பயண முகவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள திணைக்களம், இலங்கையிலிருந்து ஹஜ் புனித யாத்திரைக்கு செல்லும் யாத்திரிகர்களுக்கு பாதுகாப்பான, சுமுகமான மற்றும் வெற்றிகரமான சேவையை வழங்க அவர்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
