Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

ஹங்வெல்லவில் கார் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

ஆனி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எம்புல்கம – பனாகொட வீதியில் நேற்று (06) மாலை இடம்பெற்ற கார் விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

வீதியின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது எம்புல்கம நோக்கி பயணித்த கார் ஒன்று மோதியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய கார் நிறுத்தப்படாமல் தப்பிச் சென்ற நிலையில், காயமடைந்த பெண்கள் இருவரும் நவகமுவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் ரனால மற்றும் கிராந்துருகோட்டே பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 44 வயதுடைய பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்ததுடன், தப்பியோடிய ஓட்டுநரையும் கைது செய்துள்ளனர். விபத்தின் போது ஓட்டுநர் மது அருந்தியிருந்தமை விசாரணையில் உறுதியாகியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

17 வயது மாணவியின் சடலம் மீட்பு!

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி!

வைகாசி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு தொடர்பான விசேட கூட்டம் நாளை பாராளுமன்றத்தில்

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை ரூபாவின் மதிப்பு 2.7 வீதம் உயர்வு!

வைகாசி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube