பலாங்கொடை- மஹவலதென்ன, கஜுவத்த பகுதியில் உள்ள கற்குழியொன்றிலிருந்து 17 வயது மாணவி ஒருவரின் சடலம் நேற்று (24) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹவலதென்ன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில், அவரது தந்தை பலாங்கொடை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே, அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மாணவியின் மரணத்துக்கான இதுவரை வெளியாகவில்லை.
மேலும் சடலம் பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
