Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

சஷி வீரவங்சவின் மேன்முறையீடு நிராகரிப்பு!

ஆனி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

முறையற்ற கடவுச்சீட்டை பயன்படுத்தியதாக விதிக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை மற்றும் அபராதத்துக்கு எதிராக சஷி வீரவங்ச தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (11) தள்ளுபடி செய்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தண்டனைத் தீர்ப்பை உறுதிப்படுத்துவதாக தெரிவித்தார்.

குறித்த வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட சஷி வீரவங்சவுக்கு, 2022ஆம் ஆண்டு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 2 வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தது.

அந்தத் தீர்ப்பிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி அவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இதன்படி, இதுவரை பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த சஷி வீரவங்ச, இன்று (11) முதல் 2 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

பிள்ளையான் கைது தொடர்பில் ஞானசார தேரரின் சந்தேகம்!

சித்திரை 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடலில் மிதக்கும் வெற்று கொள்கலன்கள்!

ஆவணி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!

ஆவணி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான மோட்டார்சைக்கிள்!

ஆனி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube