Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

அமெரிக்க கடற்படையின் USS Canberra கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

ஆனி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான Independence வகை Littoral Combat Ship (LCS) எனப்படும் USS Canberra (LCS 30) இன்று (12) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, USS Tulsa, USS Charleston மற்றும் USS Santa Barbara ஆகிய கப்பல்களின் வருகைகளைத் தொடர்ந்து, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நான்காவது அமெரிக்க Littoral Combat Ship இதுவாகும்.

இந்த வருகை, இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பு, ஒத்துழைப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் கடல்சார் பங்காளிகளுக்கிடையிலான தொடர்ச்சியான தொடர்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமாண்டர் ஜேம்ஸ் மெக்லாக்லின் தலைமையிலான USS Canberra, எரிபொருள் மற்றும் தேவையான பொருட்களை ஏற்றிக்கொள்வதற்காக குறுகிய காலம் கொழும்பில் தங்கியுள்ளது.

USS Canberra (LCS 30) என்பது கரையோரப் பகுதிகளில் செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்ட Independence வகை Littoral Combat Ship ஆகும். இது முன்னணி கடற்படை இருப்பை உறுதிப்படுத்துதல், கடல்சார் பாதுகாப்பு, கடல் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

2023 ஜூலை மாதத்தில் சேவையில் இணைக்கப்பட்ட இந்தக் கப்பல், இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் திறன்மிக்க மற்றும் துரிதமாக செயல்படக்கூடிய கடற்படை இருப்பை பேணுவதற்கான அமெரிக்க கடற்படையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகவும் அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

11 நிறுவனங்களுக்கு 1.46 கோடி ரூபாய் அபராதம்!

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு மே 31ஆம் திகதி முதல் தடை !

வைகாசி 24, 2026
உலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

உலகக் கிண்ணப் பரிசளிப்பு விழா – ட்ரம்ப் பங்கேற்பு

ஆடி 19, 2026
இலங்கைவானிலை

தென்மேற்கு பருவமழை காரணமாக பலத்த காற்று எச்சரிக்கை!

ஆடி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube