Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமாமுக்கியச் செய்திகள்

ஜெய்லர் 2 அதிகாரப்பூர்வ ரிலீஸ் திகதி இதோ!

ஆடி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த திரைப்படம் ”ஜெய்லர்’.

இந்த மெகா ஹிட் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படம் வெளியாகும் அதிகாரப்பூர்வ தேதியைத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

அதன்படி, ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘ஜெய்லர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

முதல் பாகத்தில் ‘முத்துவேல் பாண்டியன்’ என்ற ஓய்வு பெற்ற ஜெய்லர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த விதம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் கதைக்களம் இன்னும் கூடுதல் ஆக்ஷன் மற்றும் திருப்பங்களுடன் இருக்கும் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி ட்ரெண்டாகி வருகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கர வண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் 3 பேர் பலி!

ஆனி 4, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

Project freedom இராணுவ நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காத்தான்குடி நகரசபையில் சர்ச்சை-  ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிர்க்கட்சிகள் அவசர அழைப்பு!

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஸ்பா நிலையங்கள் மீது பொலிஸார் சட்டவிரோத நடவடிக்கை!

ஆடி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube