Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

செல்வ சந்நிதி ஆலய உற்சவம் – பலாலி வீதியில் பாதசாரிகளுக்கு அனுமதி

#செல்வசந்நிதிஆலயம் #செல்வசந்நிதிஆலயஉற்சவம் #பலாலிவீதி #பாதசாரிகள் #பாதசாரிகளுக்குஅனுமதி #ஆலயஉற்சவம் #யாழ்ப்பாணம் #Jaffna #SelvaSannithi #TempleFestival #PalalyRoad #SriLankaNews

ஆவணி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

செல்வ சந்நிதி ஆலய தேர் திருவிழா மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு, இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினூடாக செல்லும் பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்லவும், வாகனங்களை நிறுத்தி தரித்து நிற்கவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

பலாலி வீதி கடந்த வருடம் முதல் உயர் பாதுகாப்பு வலயத்தினூடாக பயணிக்கும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்களில் தரித்து நிற்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. எனினும், குறிப்பிட்ட நேரங்களில் மாத்திரம் வீதி திறந்து விடப்பட்டு வந்தது.

இந்நிலையில், செல்வ சந்நிதி ஆலயத்தின் தேர் திருவிழா நாளையும், அதனைத் தொடர்ந்து தீர்த்த திருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து, ஆலயத்திற்குச் செல்லும் காவடி பக்தர்கள் மற்றும் பாத யாத்திரையில் ஈடுபடுவோர் பலாலி வீதியூடாக காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடந்து செல்லவும், வீதியில் வாகனங்களை தரித்து நிறுத்தவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதன் மூலம் ஆலய உற்சவங்களில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இவ்வழியாகச் செல்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நோர்வூட் நகரில் திறக்கப்படவுள்ள புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டொலரின் விற்பனை விலை 350 ரூபாவை தாண்டியது!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுத்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர்களை கைதுசெய்ய 3 விசேட குழுக்கள்!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அளுத்கம – மொரகல்ல கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய மனித தலை!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube