பருத்தித்துறை – புலோலி தெற்கு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (12) இரவு கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் வசிக்கும் சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போதே, சிறுவன் சடலமாக அவரது வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் புலோலி தெற்கு பகுதியைச் சேர்ந்த 06 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பருத்தித்துறை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
