Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்ட4 இலட்சம் பேர் இதுவரை TIN இலக்கத்தை பெறவில்லை!

ஆனி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 4 இலட்சம் பேர் இதுவரை வரி செலுத்தும் அடையாள இலக்கத்தை (TIN) பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, நாட்டில் இதுவரை 13 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ‘TIN’ இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போதைய சட்டவிதிகளின்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்துக் குடிமக்களும் இந்த அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஒட்டுமொத்தமாக சுமார் 17 மில்லியன் மக்கள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தப்பட்ட) சட்டத்தின் கீழ், பல்வேறு முக்கிய பொதுப் பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,புதிய வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல், மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல் மற்றும் வருடாந்தம் புதுப்பித்தல், புதிய வணிகங்களைப் பதிவு செய்தல், நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல், கடன் அட்டைகளைப் (Credit Cards) பெற்றுக்கொள்ளுதல் ஆகிய தேவைகளுக்கு ‘TIN’ இலக்கத்தைச் சமர்ப்பிப்பது அவசியமாகும்.

இதேவேளை, புதிய சட்டத் திருத்தத்தின் கீழ், வரி செலுத்துவோர் அடையாள இலக்கங்கள் (TIN) இனிமேல் இரகசியத் தகவலாகக் கருதப்பட மாட்டாது என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!

வைகாசி 26, 2026
இலங்கைவிளையாட்டு

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் : முதலாவது 20 க்கு 20!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் 3ம் கட்ட அகழ்வு ஆரம்பம்!

சித்திரை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி மெதடிஸ்ட் தேவாலய காணி சர்ச்சைக்கு தீர்வை பெற்றுத்தரும்படி போராட்டம்!

வைகாசி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube