Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான செயலணி கூடியது

ஆனி 16, 2026
படிக்க 3 நிமிடங்கள்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரதின் தலைமையில் இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

சுற்றுலாத்துறையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தடைகளை நீக்கி, இலங்கையை ஒரு நிலையான சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களை இணைத்து விசேட சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவதற்கான முன்மொழிவு குறித்து இங்கு விசேடமாக ஆராயப்பட்டது.

இதன்கீழ் தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களை இணைத்து, சிங்கராஜ, கன்னெலிய,தெதியகல, நாகியாதெனிய வனப்பகுதி மற்றும் ஹினிதும மலைத்தொடர் ஆகியவற்றை மையமாகக் கொண்ட விசேட சுற்றுலா வலயம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

தற்பொழுது அந்த வலயத்திற்குள் முறையற்ற விதத்தில் நிர்மாணிக்கப்படும் ஹோட்டல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தி, அதன் இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் ஒழுங்குமுறை கட்டமைப்பொன்றைத் தயாரிப்பதே இதன் நோக்கமாகும்.

இந்த வலயத்திற்குள் தேயிலை பயிர்ச்செய்கை சார்ந்த சுற்றுலாத் தொழில் மற்றும் சூழல் சார்ந்த சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய கூட்டுச் செயல்பாட்டுக் குழுவொன்றை அமைப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

கடல்சார் சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகளின் கீழ், Capital Marine and Civil Construction (CMC) நிறுவனத்தினால் 10 வருட காலப்பகுதியில் 03 கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள கடல்சார் சுற்றுலா வழித்தடம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதன் முதற்கட்டமாக, வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட பயணிகள் படகுச் சேவைகளை (Ferry services) ஆரம்பித்து, பின்னர் அதனை கொழும்பு மற்றும் காலி வரை விரிவுபடுத்துவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

சினிமா சுற்றுலாத்துறையை (Film Tourism) மேம்படுத்துவது குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டுத் திரைப்படக் குழுவினர் இலங்கைக்குள் படப்பிடிப்புகளை நடத்துவதற்கான அனுமதிகளைப் பெறுவதில் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகளை வழங்குவதுடன், ஒரே இடத்தில் அனுமதியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ‘ஒற்றைச் சாளர’ (Single Window) முறையைச் செயல்படுத்துவதன் முன்னேற்றம் குறித்தும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது. திரைப்பட உபகரணங்களை தற்காலிகமாக நாட்டிற்குள் கொண்டு வருவதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

விமானப்படை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மற்றும் சுற்றுலாச் சபை ஆகியன இணைந்த கூட்டுத் திட்டத்தின் மூலம், கொக்கல விமான நிலையத்தை மையமாகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்ட வான்வழி சாகச விளையாட்டை (Skydiving) மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், திமிங்கிலங்கள் மற்றும் டொல்பின்களைப் பார்வையிடுவதற்கான புதிய வழிகாட்டுதல்கள் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளதுடன், அந்தத் துறையை முறைப்படுத்துவதற்கும் இணையவழிப் பதிவு முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இக்கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது.

கொழும்பு நகரின் இரவு நேர சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், மரைன் டிரைவ் பகுதியில் வார இறுதியில் நடத்தப்படும் Marine Night நிகழ்ச்சித் திட்டம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் விசா மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க,பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கித்சிரி, டி.கே. ஜயசுந்தர, லால் பிரேமநாத் ஆகியோரும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் பதில் செயலாளர் ஹிமாலி அருணாதிலக, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மல்காந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட அரச அதிகாரிகளும், பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளும், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி கிரிஷான் பாலேந்திர உள்ளிட்ட சுற்றுலாத்துறையின் முக்கிய பங்குதாரர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பம்பலப்பிட்டியில் புகையிரத விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

ஆடி 20, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ‘தமிழ் அரசியல் கட்டமைப்பு முன்முயற்சி’

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

5 வருடங்களில் 265000 மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடை நிறுத்தம்

புரட்டாதி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சந்தையில் மீன்களின் விலை அதிகரிப்பு!

ஆடி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube