பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (19) மாலை, அளுத்கமவிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் குறித்த நபர் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சடல அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
