Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கு, கிழக்கில் மீட்கப்பட்ட 10,000 தங்கப்பொருட்களின் எடையிடல் நிறைவு

ஜூன் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட சுமார் 10,000 தங்கப்பொருட்களின் எடையிடல் பணிகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (16) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த தங்கப்பொருட்கள் தற்போது மத்திய வங்கியின் பாதுகாப்பில் இருப்பதாக CID தெரிவித்தது.

சுமார் 1.61 மில்லியன் மதிப்புடையதாகக் கூறப்படும் இந்த தங்கப்பொருட்களின் எடையிடல் பணிகளை நிறைவு செய்ய ஒரு வருட காலம் எடுத்ததாகவும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

மேலும், தங்கப்பொருட்கள் தொடர்பான விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, குறித்த தங்கப்பொருட்களை தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு அனுப்பி பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

விடுதலைப்புலிகளின் முகாம்கள், சட்டவிரோத வங்கிகள் மற்றும் பிற கட்டிடங்களில் இருந்து மீட்கப்பட்ட இந்த தங்கப்பொருட்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

‘அஸ்வெசும’ கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு

செப்டம்பர் 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“Clean North” செயற்திட்டத்தினூடாக காங்கேசன்துறையை அழகு படுத்தும் வேலைத்திட்டம்!

மே 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி ஒன்றினை நகர்த்த முற்பட்ட போது விபத்து

அக்டோபர் 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி கஞ்சா உட்கொண்டிருந்தமை உறுதி

செப்டம்பர் 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube