Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

தமிழக முதல்வரின் 52 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தானம்!

ஆனி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தமிழக முதலமைச்சர் சி ஜோசப் விஜய்யின் 52 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகம் சார்பில் அந்த கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் “பெரிய பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் வைப்பதை தவிர்த்து விட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்” என தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் அன்னதானம் வழங்குதல், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், வேட்டி சேலை வழங்குதல், பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை த.வெ.க தொண்டர்கள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இரத்ததான முகாம் ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வை திருச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது சர்வேஸ் ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு புடவைகள் வழங்கியும் மரக்கன்றுகளை கொடுத்தும் சிலம்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசீல்களையும் அமைச்சர் சர்வேஸ் வழங்கி வைத்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

‘அசிதிசி’ கல்வித்தொகை 2026: விண்ணப்பங்கள் கோரல்

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி நகர அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்த ஆலோசனை!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிராண்ட்பாஸில் போதைப்பொருளுடன் 24 வயது இளைஞ்சன் கைது

புரட்டாதி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube