முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உப்பு நீரில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இன்று மாலை 6:00 மணியளவில் நடைபெற்றது. இதன் போது உப்பு நீர் எடுக்கப்பட்டு, அந்த உப்பு நீரில் காட்டு விநாயகர் ஆலயத்தில் விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெறும்.
அதே நேரம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலும் இன்றிலிருந்து உப்பு நீரில் விளக்கெரியும் சிறப்பு நிகழ்வு இடம்பெறும்.
இம்மாதம் 30 ஆம் திகதி, காட்டு விநாயகர் ஆலயத்தில் பூசைகள் இடம்பெற்று, மடைப்பண்டமாக காட்டு விநாயகர் ஆலயத்திலிருந்து பூசை பொருட்கள் மற்றும் உப்பு நீர் எடுத்துச் செல்லப்பட்டு வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் 01.06.2026 வருடாந்த பொங்கல் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
