அமெரிக்காவும் ஈரானும் 60 நாட்களுக்குள் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான செயல் திட்டமொன்றில் இணக்கம் தெரிவித்துள்ளதாக கத்தார் மற்றும் பாகிஸ்தான் நடுநிலை பேச்சுவார்த்தை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை தணித்து, பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த ஒப்புதல் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் நீண்டகால முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் முயற்சிகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளன.
