Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

“அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தத்தை சீர்குலைக்க இஸ்ரேல் முயற்சி”

ஆடி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தத்தை சீர்குலைக்க இஸ்ரேல் முயற்சி செய்து வருகிறது என அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க படைகள் ஈரானின் வடக்கு பகுதிகள் மீது வான்வழி தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளன. ஈரான் தலைநகரின் முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறியதாவது : அமெரிக்கா- ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் அரசு தடையாக உள்ளது.

அமைதி ஒப்பந்தத்தை சீர்குலைக்க இஸ்ரேல் அரசில் உள்ள சிலர் முயற்சி செய்கின்றனர். அவர்கள் போரை காலவரையின்றி நீட்டிக்க விரும்புகிறார்கள். அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராக இஸ்ரேல் அரசு செயல்படுகிறது.

இஸ்ரேல் அரசில் இருக்கும் சிலர், ராணுவ நடவடிக்கையைத் தொடர விரும்புவதால், எங்களைத் திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இஸ்ரேல் அரசின் சில உறுப்பினர்களுடன் தனக்கு நல்ல உறவுகள் இருந்தாலும், போரை காலவரையின்றித் தொடரச் செய்வதற்காக, இஸ்ரேல் அரசில் சிலர் சதி செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரியும்.

பல நாடுகள், நட்பு நாடுகள் மற்றும் எதிரி நாடுகள் அமெரிக்கக் கொள்கையில் செல்வாக்கு செலுத்த
முயற்சிக்கின்றன. அந்த செல்வாக்கு, உண்மையில் அமெரிக்க அரசின் முக்கிய முடிவெடுப்பைப் பாதிக்கும்போதுதான் அது எனக்குக் கவலையளிக்கிறது என ஜேடி வான்ஸ் கூறியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

குவைத்துக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தம்!

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிலச்சரிவு அபாய ஆய்வுக்கான கோரிக்கைகள் 7,779 – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தகவல்!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு

வைகாசி 26, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

முதலாம் டெஸ்ட் – நாணய சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி

ஆனி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube