வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மலவத்தாவல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நேற்று (21) பிற்பகல் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த தீ பரவலால் வனப்பகுதியின் 10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பிரதேசத்தில் நிலவி வரும் கடுமையான வறட்சி நிலையும் பலத்த காற்றும் தீ வேகமாகப் பரவுவதற்கு காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (21) இரவு நேரத்திற்குள் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும், வனப்பகுதிக்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
