Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலை நைல் நீர்யானை குட்டிக்கு மோமோ என பெயர் சூட்டப்பட்டது!

ஐப்பசி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில், அண்மையில் பிறந்த நைல் நீர்யானை குட்டிக்கு, பெயர் வைக்க சிறுவர்களுக்காக நடத்தப்பட்ட போட்டியின் மூலம் ‘மோமோ’ (Momo) என்ற பெயர் தெரிவு செய்யப்பட்டு சூட்டப்பட்டுள்ளது.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, நேற்று (01) தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் இந்தப் பெயர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நீர்யானைக் குட்டிக்குப் பெயரிடுவதற்காக நடத்தப்பட்ட போட்டியில் சிறுவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றதுடன், சுமார் 1,000 பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன.

முன்மொழியப்பட்ட பெயர்களிலிருந்து மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகளைக் கொண்ட குழுவினால் ‘மோமோ’ என்ற பெயர் தெரிவு செய்யப்பட்டது.

இந்தப் பெயரை அவந்தா தமாரி என்ற சிறுமி முன்மொழிந்திருந்தார்.

வெற்றி பெற்ற சிறுமி அவந்தாவைப் பாராட்டும் வகையில், சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி சிறப்புப் பரிசுகளை வழங்கிவைத்தார்.

அதேவேளை, நீர்யானைக் குட்டியின் ஆரோக்கியத்தையும் நலனையும் உறுதிசெய்வதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மிருகக்காப்பாளர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்குத் திணைக்களம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டது.

மோமோ மீது பேரன்பு காட்டிய சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த திணைக்களம், மிருகக்காட்சிசாலையின் புதிய வரவான ‘மோமோ’வை நேரில் வந்து பார்வையிடுமாறு குடும்பங்களுக்கும் சிறுவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய இருதய கதிரியக்க ஆய்வுகூடம் திறந்து வைப்பு!

ஆனி 28, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

தனுஷ்கோடியில் இலங்கையர்கள் இருவர் கைது!

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று நாட்டின் பல பிரதேசங்களில் 75mm மழைவீழ்ச்சி பதிவாகும்!

ஆனி 2, 2026
இலங்கை

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான தெளிவான சுற்றுநிருபங்களை அரசு வெளியிட வேண்டும் – சாணக்கியன்

ஆவணி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube