Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசு விவசாயிகளை பாதிப்புக்குள்ளாக்கும் கொள்கைகளைப் பின்பற்றுகிறது – ஹர்ஷ டி சில்வா

ஆனி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அரசாங்கம் நுகர்வோரையும் விவசாயிகளையும் ஒரே நேரத்தில் பாதிப்புக்குள்ளாக்கும் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது. இதனால் நாட்டின் ஏழ்மையான மக்கள் பாரிய சுமைகளை சுமப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் செய்துள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசாங்கத்தின் இரண்டு அண்மைக்கால முடிவுகள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

முதலாவதாக, சோள இறக்குமதி மீதான வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், ஏற்கனவே புரதச்சத்துள்ள உணவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு, கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் மேலும் உயர்ந்துள்ளன.

இரண்டாவதாக, 150,000 மெட்ரிக் டொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உள்ளுர் நெல் விவசாயிகள் தங்களது அறுவடையை முறையான விலைக்கு விற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

பாராளுமன்ற பொது நிதிக்குழுவின் அண்மைய கூட்டத் தொடரின் போது, இதில் பிரச்சினை இருப்பதை விவசாய அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன், சந்தையில் தலையிடுவதற்கான நெல் சந்தைப்படுத்தல் சபையின் திறன் ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு தடவைகள் மட்டுமே என்ற அளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அரிசி ஏகபோகத்தை உடைத்து, சிறு ஆலை உரிமையாளர்களையும் விவசாயிகளையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘சக்தி’ அரிசி கூட்டுறவு நிறுவனம், மாற்று ஏற்பாடுகள் எதுவுமின்றி 2020 ஆம் ஆண்டில் மூடப்பட்டதையும் நான் விமர்சிக்கிறேன்.

‘சக்தி’ கூட்டுறவு நிறுவனத்தை மீண்டும் ஆரம்பியுங்கள். நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்கள் ஆகிய இரு தரப்பினரையும் பாதுகாப்பதற்கான அவசர திருத்த நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 432 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இதயவியல் சிகிச்சைப் பிரிவு திறப்பு

ஆவணி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

சீரற்ற காலநிலையினால் 27000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2027 ஆண்டுக்கான பாடசாலை தவணைக் காலம், விடுமுறை, பரீட்சைகள் தொடர்பான சுற்றறிக்கை வெளியீடு

ஆவணி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்றுடன் நிறைவுக்கு வரும் கண்டி எசல பெரஹரா

ஆவணி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube