களுத்துறை – பொரளைஸ்கமுவ பிரதான நீர் விநியோகக் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (24) இரவு 8.00 மணி முதல் நாளை (25) இரவு 8.00 மணி வரை 24 மணி நேரத்திற்கு பல பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
இதன்படி, பதுக்கை, ஹோமாகம, கொட்டாவ, பன்னிப்பிட்டிய மற்றும் பெலன்வத்த பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மகரகம பகுதிக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்த நீர்தடை காரணமாக மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள சபை, நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
