வெனிசுலா தலைநகர் கரகாஸில் இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து பதிவாகியுள்ளன. முதலாவது நிலநடுக்கம் 7.2 ரிக்டரிலும் இரண்டாவது நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவிலும் ஏற்பட்டுள்ளது.
கட்டிடங்கள் பல இடிந்து விழுந்துள்ளதுடன் குடியிருப்புகளில் இருந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி வீதிகளுக்கு வந்துள்ளனர். அதிகளவான சேதங்கள் ஏற்பட்டிருப்பதற்கு சாத்தியமிருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடப்பதற்கு சாத்தியமுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது. நேற்றைய தினம் வெனிசுலாவின் தேசிய தின விடுமுறை காரணமாக பெரும்பான்மையான மக்கள் வீடுகளிலேயே இருந்திருக்கலாமென குறிப்பிடப்பட்டுள்ளது.
