2026 FIFA உலகக் கிண்ண இறுதிப் போட்டியை மாணவர்கள் பார்வையிடும் வகையில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஜூலை 20ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடைபெறவுள்ள நிலையில், பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து கேரள கல்வித் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கால்பந்துக்கு அதிக ஆதரவு கொண்ட கேரளாவில், உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கான நேரடி ஒளிபரப்புகள் மற்றும் கொண்டாட்டங்கள் அதிகளவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
