வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ‘ஜனாவாச துன’ பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கரும்புத் தோட்டமொன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீ பரவல் காரணமாக கரும்புச் செய்கைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் பலத்த காற்று காரணமாக தீ மிக வேகமாகப் பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, பெல்வத்தை சர்க்கரை நிறுவனத்தின் தீயணைப்புப் பிரிவினரும், பிரதேச பொதுமக்களும் இணைந்து நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
யாரோ ஒரு நபர் திட்டமிட்டு இந்த கரும்புத் தோட்டத்திற்குத் தீ வைத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
