Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை!

ஆனி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ந்தால், அமைதிப் பேச்சுவார்த்தைகளை முழுமையாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என ஈரான் அமெரிக்காவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்க இராணுவ விமானங்கள் ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைதி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஈரான் மீறியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா, தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் தாக்குதல் நடத்தியுள்ளதால், இரு நாடுகளுக்கிடையேயான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் கருத்து வெளியிட்ட ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவின் அத்துமீறிய இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தால், அமைதிப் பேச்சுவார்த்தைகளை முற்றிலும் கைவிட நேரிடும் என எச்சரித்தார்.

மேலும், அமெரிக்கா வழங்கிய உறுதிமொழிகளுக்கு எவ்வித மதிப்பும் அளிக்கப்படவில்லை என்பதை அண்மைய தாக்குதல்கள் வெளிப்படுத்துகின்றன என்றும், இதுவே அந்த நாட்டின் அணுகுமுறையை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணையில் ஈரானின் கட்டுப்பாட்டுக்கு சவால் விடுக்கும் எந்த நடவடிக்கையும் பிராந்திய பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய சூழலில் மேற்கொள்ளப்படும் மாற்று நடவடிக்கைகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கக்கூடும். அதேவேளை, ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்துவதுடன், கடந்த இரண்டு இரவுகளாக காணப்பட்ட பதற்ற நிலை மேலும் மோசமடையக்கூடும் என்றும் அப்பாஸ் அராக்சி எச்சரித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

அயோத்திதாசர் பண்டிதரின் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டே வீதி ரயில் கடவை நாளை முதல் தற்காலிகமாக மூடல்!

ஆனி 5, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

அஸாம் வெள்ளப்பெருக்கில் 82 பேர் உயிரிழப்பு!

ஆவணி 2, 2026
உலகம்

அமெரிக்காவின் புதிய வரைவுத் தீர்மானத்தை உறுப்பு நாடுகள் நிராகரிக்க வேண்டும் – ஈரான்

வைகாசி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube