Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாட்டு உறுப்பினர் கூறிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை!

ஆனி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வீரகெட்டிய பகுதியில் சனிக்கிழமை (27) இரவு நடத்தப்பட்ட மதுவிருந்தொன்றில் ஏற்பட்ட தகராறில், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாட்டு உறுப்பினர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாந்தோடை மாவட்ட இளைஞர் அமைப்பின் ஊடகச் செயலாளராகப் பணியாற்றிய 30 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வீரகெட்டிய – கிஞ்சிகுணே பகுதியில் சனிக்கிழமை (27) இரவு மதுவிருந்தொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மதுவிருந்தின் போது, உயிரிழந்த இளைஞருக்கும் அங்கிருந்த மற்றொரு நபருக்குமிடையே திடிரென வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதை அடுத்து, ஏற்பட்ட மோதலில் சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் குறித்த இளைஞரைத் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் குறித்த இருவருக்குமிடையிலான மோதலில் சந்தேகநபரின் தாயாரும் இதன்போது தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நிலையில், வீரகெட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஹகுருவெல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தீவிர அரசியல் செயல்பாட்டு உறுப்பினர் எனவும் தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய 29 வயதான மெதமுலன பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

அதிகரித்த்துவரும் AI தொழில்நுட்பத்துக்கான செலவீனங்கள்!

வைகாசி 30, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இந்திய ஏ அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்திய இலங்கை ஏ அணி !

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் நீராடச் சென்று காணாமல் போன 3 சிறுவர்களில் இருவர் சடலமாக மீட்பு!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2029 இல் நாமல்தான் ஜனாதிபதி – அர்ச்சுனா இராமநாதன்

ஆனி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube