Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அநுராதபுரம் செல்லும் பக்தர்களுக்கு விசேட கோரிக்கை!

ஆனி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கைக்கு உன்னதமான பௌத்த தர்மம் கிடைத்த பெருமைக்குரிய பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியிலிருந்து வருகை தந்துள்ள பெருமளவிலான பக்தர்கள் தற்போதிருந்தே வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

இம்முறை பொசன் உற்சவமானது நீண்ட வார இறுதி விடுமுறையுடன் இணைந்து அமைந்துள்ளதால், அநுராதபுரம் புனித நகரத்தை நோக்கி வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழமையை விட கணிசமாக அதிகரித்துள்ளது.

இம்முறை தேசிய பொசன் உற்சவத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை புனித பூமி, அநுராதபுரம் அட்டமஸ்தானம் மற்றும் தந்திரிமலை ரஜமகா விகாரை ஆகிய புண்ணிய ஸ்தலங்களை மையமாகக் கொண்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அநுராதபுரம் அட்டமஸ்தானத்தின் பொறுப்பதிகாரி வணக்கத்திற்குரிய ஈதல்வெடுனுவெவே ஞானதிலக்க தேரர் பொதுமக்களுக்கு விசேட கோரிக்கை ஒன்ற விடுத்துள்ளார்.

புனித நகரத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள் மற்றும் மரச்செடிகளைப் பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், புனித பூமியின் தூய்மையைப் பேணும் பொருட்டு, கண்ட இடங்களில் குப்பைகளைக் கொட்டுவதைத் முற்றாகத் தவிர்க்குமாறும் அவர் பக்தர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

கரூர் நெரிசல் உயிரிழப்பு: அரசுப் பணி ரத்து தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேன்முறையீடு!

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெனியாய கல்வி வலயத்தில் சிறுவர்களிடையே பரவும் மூளைக்காய்ச்சல்!

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சலே, கடவுச்சொற்களை வழங்காமைக்கான காரணங்களை வௌிப்படுத்திய கம்மன்பில

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பயங்கர விபத்து – பிறந்து 10 நாட்களேயான குழந்தை உட்பட மூவர் பலி

ஆவணி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube