Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிழக்கு மாகாண விசேட காணிக்குழு தீர்மானத்தை ரத்து செய்யுமாறு ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

#EasternProvince #LandCommission #SpecialLandCommission #SriLanka #President #UrgentLetter #LandRights #Policy #BreakingNews #SriLankaPolitics #TamilNews #EastSriLanka #Governance #PublicInterest #NewsUpdate

ஆனி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட குழு ஒன்றையும், பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையிலான “முழு அதிகாரம்” கொண்ட விசேட பொலிஸ் பிரிவொன்றையும் அமைப்பதற்கு கடந்த 22 ஆம் திகதி அமைச்சரவை எடுத்த தீர்மானம் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு அல்லது இடைநிறுத்துமாறு கோரி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ‘இலங்கை நீதிக்கான மய்யம் அமைப்பு மிக அவசரமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பு மற்றும் கடலோர அத்துமீறல்களைத் தடுப்பதாகக் கூறி கொண்டுவரப்பட்டுள்ள இந்த விசேட பொறிமுறை, சிறுபான்மையினர் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தை மட்டும் குறிவைத்து எடுக்கப்பட்ட தன்னிச்சையான நடவடிக்கை என அந்த அமைப்பு சாட்டியுள்ளது.

காணி ஆக்கிரமிப்புகளும், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களும் கிழக்கு மாகாணத்துக்கு மட்டும் உரியவை அல்ல அவை தெற்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்கள் உட்பட நாடு முழுவதும் காணப்படும் தேசியப் பிரச்சினைகளாகும்.

அவ்வாறிருக்கையில், கிழக்கு மாகாணத்துக்கு மட்டும் இத்தகைய விசேட குழுவை அமைப்பது மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் சந்தேகத்தையும் தோற்றுவிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியலமைப்பின் 12(1) மற்றும் 12(2) உறுப்புரைகள் இன, மத, பிராந்திய பாகுபாடின்றி சமத்துவத்தை உறுதிப்படுத்துகின்றன. இந்த ஒருதலைப்பட்சமான மாகாண பொறிமுறையானது அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணானது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க அரச காணிகள் (பொறுப்பேற்பு மீட்பு) சட்டம், அரச காணிகள் சட்டம், காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் மற்றும் கடலோரப் பாதுகாப்புச் சட்டம் என ஏற்கனவே போதுமான சட்டக் கட்டமைப்புகள் உள்ள நிலையில், புதிய குழுக்கள் எதற்காக என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

கையடக்க தொலைபேசிகளின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலே இராணுவத்தில் இருந்த மிகச் சிறந்த மற்றும் திறமையான அதிகாரி – மகேஸ் சேனாநாயக்க

ஆடி 23, 2026
இலங்கைஎங்கள் ஊர்தொழில்நுட்பம்

யாழில் நடமாடும் கோள்மண்டலம்!

ஆடி 25, 2026
இலங்கை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் நடுக்கடலில் கைது!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube