கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் இரவுப் போட்டியாக நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் கெலன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்கள் என்ற பிரம்மாண்டமான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.
அங்கு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்க, 38 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 65 ஓட்டங்களைக் குவித்தார்.
இதற்கு மேலதிகமாக, அவுஸ்திரேலிய வீரர் சாம் ஹார்பர் 19 பந்துகளில் வேகமாக 40 ஓட்டங்களை தனது அணியிக்காக பெற்றுக்கொடுத்தார்.
துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்திய அணியின் தலைவர் தசுன் ஷானக 12 பந்துகளில் 31 ஓட்டங்களையும் சஹான் ஆராச்சிகே 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
214 ஓட்டங்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணியால் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
ஜப்னா அணி சார்பில் துனித் வெல்லாலகே 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
