Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 402 பேர் கைது!

ஆனி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

பொலிஸ் மா அதிபரின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட சோதனை நடவடிக்கைக்கு அமைய பல்வேறு குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 20 முக்கிய சந்தேகநபர்கள் உட்பட 402 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்துப் பிராந்திய பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கியதாக வலய மட்டத்திலான பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, கடந்த 2026 ஜூன் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 27,713 நபர்கள் பொலிஸாரால் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது, குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 20 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேகத்தின் பேரில் 402 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பகிறங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 76 சந்தேகநபர்கள் மற்றும் நாள் குறிப்பிட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 120 நபர்களும் கைதுசெய்து செய்துப்பட்டுள்ளனர்.

மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 34 சாரதிகளும், ஆபத்தான முறையில் அலட்சியமாகவும் கவனயீனத்துடனும் வாகனம் செலுத்திய 224 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட் 3592 பேருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புனித ஹஜ் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு ஜனாதிபதியின் வாழ்த்துச்செய்தி!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 3 சிறைக்காவலர்கள் கைது!

வைகாசி 5, 2026
இந்தியாஇலங்கைவிளையாட்டு

ஓகஸ்டில் இலங்கை வருகிறது இந்திய கிரிக்கெட் அணி!

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற ஒருவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு !

ஆனி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube