மாவனெல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னஹேன பகுதியிலில் ஏற்பட்ட குடும்பத் தகராறு கொலைச் சம்பவமாக மாறியுள்ளது.
திங்கட்கிழமை (29) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 42 வயதுடைய ஒருவர் தனது சகோதரரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்தவருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் கன்னஹேன, அலத்தார பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேலதிக விசாரணைகளையும் மாவனெல்லை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
