(க..சரவணன்)
கிழக்கில் கடந்த 1985ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தமிழ் மக்களை முஸ்லிம்கள் இன சுத்துகரிப்பு செய்து கொண்டு வருகின்ற போது அதற்கு எதிராக தமிழரசுக் கட்சி உட்பட தமிழ் தேசிய அரசியல்வாதிகள் குரல் கொடுக்காது மெளனமாக இருப்பது, தமிழ் மக்களின் பூர்வீகமான கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்கான சதி திட்டமே, இந்த ஆறுகட்சிகள் கூட்டு என ஈழத்தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணா தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர் முன்னணி கட்சி நேற்று புதன்கிழமை (12) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தொடக்கம் துறைநீலாவனை வரையும் உள்ள பல சாய்ந்தமருது (கரைவாகுவடக்கு) நிந்தவூர், பாலமுனை, திராய்க்கேணி, மீனோடைக்கட்டு, சம்மாந்துறை, வீரமுனை, பொத்துவில், உட்பட பல கிராமங்களில் உள்ள தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு கட்டிடங்களுக்கு தீவைத்து விரட்டியடிக்கப்பட்டு, அவர்களின் நிலங்களை கபளீகரம் செய்ததுடன் ஆலையங்கள் இருந்த இடங்களில் பள்ளிவாசல் மற்றும் மீன்சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே ஓட்டமாவடியில் காளிகோவிலை உடைத்து அதில் மீன்சந்தை கட்டியதாகவும், அதற்கு நீதவானை கூட தனது அதிகாரத்தை பயன்படுத்தி இடமாற்றம் செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எ.எல்.எம். ஹிஸ்புல்லா தெரிவித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
இவ்வாறு தமிழர்கள் மீது ஊர்காவல்படை என்ற போர்வையில் தமிழர்கள் மீது கட்டவிழ்துவிடப்பட்டு தமிழர்களை படுகொலை செய்துள்ளனர். தமிழர்கள் மீது இடம்பெற்ற இந்த அடாவடிக்கு எதிராக அன்றில் இருந்து இன்று வரை தமிழர்களின் பிரதி நிதிகள், தலைவர்கள் என தெரிவித்து வருபவர்கள் எவரும் குரல் கொடுக்காது மௌனமாகவே இருந்து வருகின்றனர்.
கடந்த 2014ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழரசுகட்சி 11 ஆசனங்களை பெற்று கொண்டு முஸ்லீம் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து முஸ்லிம்களுக்கு முதலமைச்சு பதவியை தாரைவார்த்து கொடுத்தது தமிழரசு கட்சி
அதேபோல கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்கே இந்த 6 கட்சி கூட்டு . அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதேச செயலகமான கல்முனை தமிழ் பிரதேசசெயலகத்தின் கணக்காளரை கூட வழங்க மறுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள், தமிழ் மக்களின் நலனில் அல்லது உரிமைக்காக குரல்கொடுப்பார்களா மக்களே சிந்தியுங்கள்.
சோலியன் குடுமி சும்மா ஆடாது என்ற பழமொழி போல முஸ்லிம் அரசியல்வாதிகள் கிழக்கை தமிழ் மக்களிடம் இருந்து ஒட்டு மொத்தமாக பார்ப்பதற்காகவே இந்த 6 காட்சிகள் கூட்டுசேர்ந்துள்ளன.
எனவே கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இந்த கூட்டு கட்சிகளிடம் மிக அவதானமாக விழிப்பாகவும் இருக்க வேண்டும் இல்லையே நாங்கள் எதிர்காலத்தில் கிழக்கு மண்ணைவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
கடந்த கால ஆட்சியாளர்களுடன் சேர்ந்து அதிகாரங்களை வைத்து தமிழ் மக்களை அழித்தொழித்த சம்பவங்கள் இனி தொடரவிடப்போவதில்லை என்பதுடன், அந்த அராஜகத்துக்கு சட்டரீதியாக ஈழத்தமிழர் முன்னணி முற்றுப்புள்ளிவைக்கும் என அந்த அறிக்கையில் சுட்டிகாட்டியுள்ளார்.
