Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொருளாதார வளர்ச்சியை 8% வரை உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்கு

#8PercentEconomicGrowth #EconomicGrowthGoal #GrowthTo8Percent #EconomicGrowthTarget #Towards8PercentGrowth

ஆடி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
தற்போது 5% மட்டத்திலுள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் ஆண்டுகளில் 7% – 8% மட்டத்திற்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளின் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினருடன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைப் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்காக அடுத்த ஆண்டில் மூலதனச் செலவாக 2 ட்ரில்லியன் ரூபாவை ஒதுக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.

இதன் மூலம் ஏற்படும் டொலரின் தேவையை ஈடுசெய்ய ஏற்றுமதித் துறையின் அதிகபட்ச பங்களிப்பை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது இலங்கையின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி வருமானத் துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் வருடத்திற்கு 5 பில்லியன் டொலர்களையும், மின் மற்றும் இலத்திரனியல் துறை மூலம் 2 பில்லியன் டொலர்களையும் ஈட்டும் சாத்தியக்கூறுகள் குறித்தும் போது ஆராயப்பட்டது.

அத்துடன், இந்த துறைகளை உலகளாவிய வர்த்தக நாமமாக மாற்றுவதற்கும், எதிர்கொள்ளும் சவால்களுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்கும் விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவித்த டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, மெய்நிகர் விசேட பொருளாதார வலயம் மற்றும் தரவு மையத்தை ஸ்தாபிப்பதற்கான திட்டங்கள், சுங்கத் தடைகளை நீக்குவதற்கான “Green Channel” முறைமை மற்றும் வங்கி முறைமையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

ரோஹித ராஜபக்ச வாக்குமூலம் வழங்க CCIB முன் ஆஜர்!

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர் தாக்குதல்: ஒருவருக்கு பலத்த காயம்

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலை களஞ்சிய பகுதியில் பாரிய தீ விபத்து!

வைகாசி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரண பரிசோதனை அறிக்கை!

ஆடி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube