Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட 4 பேர் கைது!

ஆடி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வவுனியா மாநகரசபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை என்பன காணாமல் போயுள்ளதாகச் சபையின் செயலாளரால் நேற்றுமுன்தினம் (30) வவுனியா தலைமையக காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய, CCTV காட்சிகளின் உதவியுடன் வவுனியா தலைமையக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த விசாரணைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை, காவல்துறையினரால் நேற்று (01) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையினைப் பரிசீலித்த நீதவான், காவல்துறையினரின் கோரிக்கைக்கு அமையச் சந்தேகநபர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதன்படி, முன்னாள் முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக வவுனியா தலைமையக காவல்துறை நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அரிய வகை விலங்குகளின் பாகங்களுடன் இருவர் கைது!

ஆவணி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 334 என்புக்கூடுகள் அகழ்வு!

ஆனி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு என்னை அழையுங்கள் – நாமல்!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படும் அபாயம்!

புரட்டாதி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube